Thursday, April 9, 2015

ஜெயலலிதாவின் தங்கை என்று கூறிய சைலஜா மரணம்!

                 

                                                   பெங்களூரு கெங்கேரி ராமச்சந்திரா பகுதியில் வசித்து வந்தவர் சைலஜா (வயது58). இவர் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தங்கை என்று கூறிக்கொண்டு முன்பு பத்திரிகை களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் ஜெயலலிதா தன்னை தங்கையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறிவந்தார். 

இந்நிலையில் வறுமையில் வாடிய சைலஜா சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். நேற்று  நள்ளிரவு அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று  மைசூரு ரோட்டில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அம்ருதா என்ற மகள் இருக்கிறார்.

No comments:

Post a Comment